திருவண்ணாமலை,:
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசின் புதிய நடைமுறைப்படி ஞாயிற்றுக் கிழமையான நேற்று ரேஷன் கடைகள் திறந்திருந்தன. பொதுமக்கள் பொருட்கள் வாங்கிச்சென்றனர்.
தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும்மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு பொதுவிநியோக திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் ரேஷன் கடைகளுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டது. அதனால் ஒரு குடும்பத்தில் கணவன்&மனைவி இருவரும் வேலைக்கு சென்றால், ரேஷன் பொருட்களை வாங்க ஒருவர் லீவு போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதை தவிர்க்கும் விதமாக ரேஷன் கடைகளை ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதை நிறைவேற்றும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை கூட்டத்தொடரில் இனி மாதத்தின் முதல் மற்றும் 2 வது ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்த நடைமுறையை ஜூலை மாதம்(இந்த மாதம்) முதல் நடைமுறைபடுத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முதல் ரேஷன் கடை திறப்பது தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1107 நிரந்தர ரேஷன் கடைகளும், 496 பகுதி நேர ரேஷன் கடைகளும் ஆக மொத்தம் 1603 கடைகள் உள்ளன. இதில் 1107 நிரந்தர ரேஷன் கடைகளும், 496 பகுதி நேர ரேஷன் கடைகளில் வெள்ளிக்கிழமை மட்டும் திறந்து இருக்கும் பகுதி நேர ரேஷன் கடைகளும் நேற்று திறந்து இருந்தன. பொதுமக்கள் வழக்கம் போல ரேஷன் பொருட்களை வாங்கிச்சென்றனர்.

No comments:
Post a Comment