ஆத்மாவின் அரும் மருந்து-ருத்ராட்ஷம்

 
 ருத்ராட்ஷத்தின் - மகிமை

ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?

              சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார்.  எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும்
ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?
                ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம்.  எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம்.  நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
                     சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.  ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள்.  இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில்  வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும்.  ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.

பிரதோஷத்தின் பலனும் மகிமையும்

பிரதோச வழிபாட்டினைக்
   
  கடைப்பிடித்து  சகல நலனும் பெறுவோமாக
 

பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.
பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது  

Train Schedule

Train Name & No:
Starts From
Arrival at Thiruvannamalai
Destination
Service Days


ஓம் நமச்சிவாய அல்லது சிவாயநம எப்படி கூறலாம்


ஓம் நமசிவாய என்பது பஞ்சாட்சரம். இது வேதத்தில் உள்ளது. சிவ உபாசனை செய்கிறவர்கள் இதைத்தான் ஜபிப்பார்கள். இதையே தியானம் செய்வார்கள். யோக மார்க்கத்தில் செல்கிறவர்கள் பஞ்சாட்சரத்தை ஸ்தூல பஞ்சாட்சரம் என்றும் சூக்கும பஞ்சாட்சரம் என்றும் இரண்டாகப் பாகுபடுத்திச் சொல்லியிருக்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் செல்பவர்களுக்கு ஸ்தால பஞ்சாட்சரம் என்பதும், சூக்கும பஞ்சாட்சரம் என்பதும் பேதம் கிடையாது. யோக மார்க்கத்தில் செல்பவர்கள் அப்படி பாகுபடுத்தி சொல்வதற்கு தக்க காரணம் உள்ளது. அதாவது, ஓம்நமசிவாய, நமசிவாய, சிவாயநம, சிவா, வசி இப்படி மாத்திரைகளைச் சுருக்கிக் கொண்டு போகப் போக அது சூக்குமமாகிவிடுகிறது. பிராணாயமம் செய்கிற போது பூரகம், கும்பகம், ரேசகம் என்று பழகுகிற போது, ஒவ்வொன்றுக்கும் எத்தனை மாத்திரை கால அளவு தருவது என்கிற கேள்வி வருகிறது. காலத்தை வெறும் எண்ணிக்கையால் அளப்பதை விட மந்திர உச்சரிப்பால் அளப்பது மிகுந்த பலன் தரும் என்பதற்காகவே இந்த சூக்கும மந்திரங்கள் தோன்றின.


தி.மலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று ரேஷன் கடைகள் திறப்பு பொதுமக்கள் பொருட்கள் வாங்கிச்சென்றனர்

திருவண்ணாமலை,:
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசின் புதிய நடைமுறைப்படி ஞாயிற்றுக் கிழமையான நேற்று ரேஷன் கடைகள் திறந்திருந்தன. பொதுமக்கள் பொருட்கள் வாங்கிச்சென்றனர்.
 தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும்மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு பொதுவிநியோக திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் ரேஷன் கடைகளுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டது. அதனால் ஒரு குடும்பத்தில் கணவன்&மனைவி இருவரும் வேலைக்கு சென்றால், ரேஷன் பொருட்களை வாங்க ஒருவர் லீவு போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதை தவிர்க்கும் விதமாக ரேஷன் கடைகளை ஞாயிற்றுக் கிழமைகளில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

ஞான விளக்கம்


ஒரு பழத்திற்காக முருகன் கோபித்தாரா?

இந்து மதம் தன்னுள் பல்வேறு தத்துவப் புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச் சரியாக அந்தப் புதையல்களைக் கண்டெடுத்தவர்களை தான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகிறோம். அற்புதமான சிந்தனைகளை செறிவு மிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன. பழம் கிடைக்காமல் போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா? என்ன சொல்கிறது பழநி முருகனின் கதை?

தி.மலை-சென்னைக்கு இடையே புதிய (சிறப்பு) ரயில் இயக்க வேண்டுகோள்

திருவண்ணாமலை கிரிவலம்


திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் இருக்கும் மிக பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பபடுகிறது. பல மா மன்னர்களின் முயற்சியால் நன்கு வளர்ந்து இன்று புகழுடன் விளங்குகிறது. மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் கவிதைகள் மூலம் பாராட்டுகளை பெற்ற ஸ்தலமாக உள்ளது. பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி வடிவத்தில்